முன்னுரிமைப்பட்டியலுக்கு அப்பால் தடுப்பூசி வழங்கல்- ஜனாதிபதி விசாரணை அவசியம்
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமைப்பட்டியலுக்கு வௌியே கொவிட் 19 தடுப்பூசி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஜனாதிபதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
மீதமுள்ள இந்தியாவின் சீரம் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை சுகாதாரத்துறையினருடைய குடும்ப அங்கத்தவர்களுக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தற்போது தெரிவித்துள்ளது.
முன்னுரிமைப்பட்டியலில் சுகாதாரத்துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்வாங்கப்படவில்லையென்பது சுகாதார அமைச்சுக்கு தெரியாதா? பின்னர் எவ்வாறு அவர்களுக்கு இரண்டாம் தடவை தடுப்பூசி வழங்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் சுகாதாரத்துறை என்பது மருத்துவர்களை மட்டுமே கொண்டது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரதுறையில் உள்ள முன்நிலை ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இவ்வாண்டு ஆரம்பத்தில் ஒக்ஸ்போர்- அஸ்ட்ராசெனக்கா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குடும்ப அங்கத்தவர்களுக்கு வழங்குவது எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல முன்னிலை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2ம் தடவைக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மருந்தின் 925,242 தடுப்பூசிகளையும், மே 24 ஆம் தேதி நிலவரப்படி 338,493 டோஸையும் இலங்கை வழங்கியிருந்தாலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை நிர்வகிக்க போதுமான அளவு கொள்முதல் செய்வதை நாடு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மீதமுள்ள இரண்டாவது அளவுகள். மீதமுள்ள அளவுகளை விரைவில் பெறுவது குறித்து பல வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் அஸ்ராசெனக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தடவை 925,242 பேருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் தடவை மே மாதம் 24ம் திகதியளவில் 338,493 பேருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் முறை செலுத்துவதற்கு போதுமான அளவு கொள்முதல் செய்வதை இதுவரை அரசு உறுதிப்படுத்தப்படவில்லை. பல வெளிநாட்டு அரசாங்கங்களுடன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.