கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்!
கட்டுநாயக்க உட்பட ஏனைய வர்த்தக வலயங்களிலும் வடக்கிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், ஏனைய தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களின் நன்மை குறித்து கவனம் செலுத்துவதில்லை என்று வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின் திட்ட பிரதானி சமிலா துஷாரி கவலை வௌியிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான விடுமுறை வழங்கல், சுகாதார வசதிகளை தேவையான அளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள நடமாட்டத்தடை, வழங்கப்படும் விடுமுறைகள் என்பன தொழிலாளர்களுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?
நாடடை முடக்கினாலும் நிறுவனங்கள் பணியாற்றுவது அவசியம். அத்தியவசிய சேவையாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளவா இல்லையா என்பது வேறு விடயம். எத்தனைப் பேருக்கு நேர்மறையாக இருந்தாலும் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் பயணிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் அவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் போக்குவரத்துகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டமையினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் பொதுவாக இவர்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும். பயணக்கட்டுப்பாட்டை காரணம் காட்டி வீடுகளுக்கு செல்வதை தடுப்பதற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளை திறந்து வைத்திருப்பதனால் எத்தகைய எதிர்மறையாக நிலை ஏற்பட்டுள்ளன?
தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் 25 வீதமான ஊழியர்களே சேவைக்கு அழைக்கப்படுகின்றனர். ஆரம்ப காலங்களில் மாத்திரமே இத்தொழிற்சாலைகளில் இவ்வாறு அழைக்கப்பட்டனர். தற்போது அவ்வாறு இல்லை. இதனால் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நூறு பேருக்கு பிசிஆர் செய்தால் குறைந்தது 25 பேருக்காவது நேர்மறையான (பொசிடிவ்) முடிவுகள் வருகின்றன. பியகமவில் ஒரு பிரதேசத்தை முடக்கினார்கள். அவ்வாறு இருக்கும் போதே பிள்ளைகள் வேலைக்கு செல்லவேண்டும். தங்குமிடங்களிலும் பிரச்சினை. முன்னர் போன்று தனிமைப்படுத்தலுக்கான அறிவித்தல் ஒட்டப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஒரு தங்குமிடத்தில் பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றாக தங்கியிருக்கக்கூடும். தொற்றுக்குள்ளானவுடன் இவர்கள் யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்விடங்களில் வசதிகள் மிகக்குறைவு. சில நாட்களின் பின்னர் மீண்டும் அழைத்த வந்தவுடன் தங்குமிடத்தில் விட்டவுடன் அங்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. எவ்வித கொள்கையும் இல்லாதிருப்பதே பிரச்சினையாகும்.
சுழற்சி முறையில் அவர்களுக்கு சேவை வழங்கப்படுமாயின் அவர்களுடைய பொருளாதாரத்தை சமாளிக்க முடியுமா?
முடியாது. சுழற்சி முறையில் சேவையாற்றுவது வெற்றியளிக்கவில்லை என்பது தௌிவானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பு அனைத்து நிறுவனங்களிலும் கொவிட் நிவாரண சுகாதார குழுவை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியது. அதற்கமைய இரு நிறுவனங்கள் மாத்திரமே செயற்பட்டிருந்தன. ஏனைய நிறுவனங்களில் அதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. அங்கு ஊழியர்களுக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவௌி இருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு தடவையாவது தொற்று நீக்கம் செய்யவில்லை. ஒருவர் சுகயீனமுற்றால் பக்கத்தில் இருப்பவர் மாத்திரமே அகற்றப்படுகிறார். ஏனையோர் பணியாற்றுவர். அனைவரும் ஒன்றாக சிற்றுண்டிச்சாலைக்கு செல்கின்றனர். பஸ்ஸில் ஒன்றாக பயணிக்கின்றனர். பஸ்களில் சமூக இடைவௌி கடைப்பிடிக்கப்படுவதில்லை. தங்குமிடங்களில் சுகாதார வசதிகள் போதியளவு இல்லை. பொதுவான கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர். ஒரு வருட அனுபவத்திலும் நாம் பாடம் படிக்கவில்லை.
இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?
குறிப்பிட்ட காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கி தொழிற்சாலைகளை மூட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் உரிய தரங்களை மேம்படுத்தி தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகளுக்குள்ளேயே தங்குமிடங்களை வழங்கி சேவையை முன்னெடுக்க வேண்டும். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே முன்னெடுக்க வேண்டும். அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் எவ்வாறு கைத்தொழிலை முன்னெடுத்து செல்வது? தொழிற்சாலைக்குள்ளேயே தங்குமிட வசதிகளை வழங்கினால் நோய் ஏனைய தொழிற்சாலைகளுக்கு பரவாது. எனக்கு தெரிந்த ஒரு பிள்ளைக்கு கொவிட் தொற்று உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்படவில்லை. அவருடைய தங்குமித்தில் உள்ள ஏனையோருக்கும் அவர் பயன்படுத்திய கழிப்பிடம், குளியலுக்கான கிணறு என்பவற்றை பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சில தங்குமிடங்களில் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். அவ்வாறான ஒரிடத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்முறை அந்தந்த தொழிற்சாலைகள் அவர்களுடைய ஊழியர்களின் பாதுகாப்பை பொறுப்பெடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இப்போது நாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாற்போன்ற வேலையை செய்கிறோம். அதேபோல் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் சேவைக்க்கு மீள திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியின் சம்பளம் இல்லாமலாக்கும் புதிய அநீதியும் தற்போது தலைதூக்கியுள்ளது என்றும் வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின் திட்ட பிரதானி சமிலா துஷாரி சுட்டிக்காட்டியுள்ளார்.