5 இலட்சம் தடுப்பூசிகள் பகிரப்படும் முறைமை குறித்து விளக்கம்

5 இலட்சம் தடுப்பூசிகள் பகிரப்படும் முறைமை குறித்து விளக்கம்

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளில் 2ஆம் மாத்திரை தடுப்பூசி ஏற்றத்திற்காக 375,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 125,000 தடுப்பூசிகள், காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி சினோபாம் தடுப்பூசிகளை உடனடியாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image