கற்பிக்கும் பாடசாலையிலேயே பிள்ளைகளை சேர்ப்பதற்கான நிபந்தனை குறித்து...

கற்பிக்கும் பாடசாலையிலேயே பிள்ளைகளை சேர்ப்பதற்கான நிபந்தனை குறித்து...

ஆசிரியர்களின் பிள்ளைகளை அவர்கள் பணிபுரியும் பாடசாலையில் சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் உள்ளடங்கிய விடயங்களாக, மேற்கொண்ட விடயம் தொடர்பாக எமது சங்கம் மற்றும் அந்த ஆசிரியர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளின் படி உங்கள் பரிந்துரையின் பேரில் தேசிய பாடசாலை பணிப்பாளராக எண் ED / 1/6/15 / AD/AC- NAC/ 2021 மற்றும் 11.06.2021 தேதியிட்ட அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தேசிய பாடசாலைப் பணிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் படி, தொடர்புடைய ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பாடசாலையில் 3 வருட சேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்றும் தற்போது கற்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காது என்ற நிபந்தனைகளை விதித்ததன் மூலம் பல ஆசிரியர்களை மேலும் துன்புறுத்துவதால் இந்த நிபந்தனைகளை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக ஒரு தேசிய அல்லது மாகாணப் பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் பத்து வருட சேவையை முடித்த பின்னர் அல்லது தனிப்பட்ட காரணங்களால் இடமாற்றம் காரணமாக அவர்களுடைய பிள்ளைகள் அவர்கள் பணிபுரியும் பாடசாலையில் சேர வாய்ப்பைக் கேட்டுக்கொள்வதற்கு காரணம் முன்னர் விளக்கியபடி அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களாகும். காலையில் 7.30 மணிக்கு முன்பு பாடசாலைக்கு வருகைத்தருவதும் மதியம் 1:30 மணிக்கு பின்பும் பாடசாலையில் நடைபெறும் மேலதிக பாடநேறி மற்றும் செயற்பாடுகள் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதகுமாகப் பெறும் வாய்ப்பாகும் என்பதையும் இது ஒரு சிறப்புச் சலுகை அல்ல, என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

ஆனால் கல்விச் செயலாளராக, நீங்கள் வழங்கிய சுற்றறிக்கைகள் அல்லது தேசியப் பாடசாலைகளின் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த நிபந்தனைகளையும் நீங்கள் பயன்படுத்தாத பல நிகழ்வுகள் உள்ளன, ஆனால் கல்வியின் முதன்மைப் பாத்திரத்திற்கு பொறுப்பான ஒரு சில ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதை எமது சங்கம் ஒருபோதும் ஏற்றுகொள்ளாது.

 

எனவே இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தி, மேலும் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான மே 21 திகதிக்கு முன்னர் இந்தச் சேவைக் கால நிபந்தனைகளை அல்லது தற்போது பிள்ளை கற்கின்ற பாடசாலை தேசிய பாடசாலையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அகற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் நாங்கள் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம் என சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image