தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்- உள்விவகார அமைச்சு

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்- உள்விவகார அமைச்சு

மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராமசேவகர்கள் மற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அடுத்தக் சுற்றில் கொவிட் 19 வழங்கப்படும் என்றும் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது என உள்விவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சுற்று தடுப்பு மருந்துகள் நாட்டை வந்தடைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் மேற்கூறப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். மேற்கூறப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளனர்.

எனவே, யாரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் உங்கள் சேவைகள் நாட்டுக்கு மிக முக்கியம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

டெய்லி மிரர்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image