தற்போது நிலவும் அபாயநிலைமையை கருத்திற்கொண்டு அதிகூடிய பாதுகாப்புகளுனும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் தொழிற்சாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபை அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அனைத்து உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு இவ்விடயம் தொடர்பில் அறியப்படுத்துவதாக முதலீட்டு ஊக்குவிப்புச்சபைத் தலைவர் சஞ்சய மொஹொட்டால தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளின் எதிர்கால நன்மைக்கருத்திற்கொண்டு இவ்வாறான அபாயகரமான சூழலில் ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
நாட்டில் கொவிட் 19 தொற்று மிகவேகமாக பரவ ஆரம்பித்ததையடுத்து நோயாளர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சில தொழிற்சாலைகளிலும் தொற்று காணப்படுகிறது. எனினும் நிர்வாகங்கள் மிக சிறந்த, பாதுகாப்பான முறையில் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றமை பாதுகாக்கத்தக்கது.
தொழிற்சாலைகளுக்குள் மாத்திரமல்ல போக்குவரத்தின்போது, வீடுகளில் மற்றும் ஏனைய இடங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதனூடாக இத்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என நான் நம்புவதாகவும் முதலீட்டு ஊக்குவிப்புசபை தலைவர்.
சில தினங்களுக்கு முன்னர் துல்ஹிரிய முதலீட்டு வலய தொழிற்சாலையொன்றில் 400 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டனர். அதேபோல் பண்டாரகம தொழிற்சாலையொன்றில் 617 கொவிட் 19 தொற்றாளர்களும் புடலுஓய பிரதேச தனியார் ஆடைத்தொழிற்சாலையில் 108 தொற்றாளர்களும் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.