14 நாட்கள் முடக்கல் அவசியம்- அறிவியல் காரணங்கள் கூறும் பேராசிரியர்

14 நாட்கள் முடக்கல் அவசியம்- அறிவியல் காரணங்கள் கூறும் பேராசிரியர்

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடமாட்டத் தடை விதிக்கும் போது தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு விதிப்பதன் முக்கியத்துவத்தின் அறிவியல் ரீதியான விளக்கங்களை ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தௌிவுபடுத்தியுள்ளார்.

உலகில் முதற்தடவையாக ஆய்வுகூட பரிசோதனைகளினூடாக சார்ஸ் வைரஸ் கண்டறிந்த பெருமையை தனதாக்கிக்கொண்டுள்ள பேராசிரியர் மலிக் பீரிஸ், இரு தினங்களுக்கு முன்னர் தொழில்வல்லுநர்கள் சங்கம் இணையத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் ஹொங்கொங்கில் இருந்து கலந்துகொண்டு இக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். உதாரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் தொற்றாளர்கள் உள்ளனர். அதேபோல் அனைத்து மாகாணங்களிலும் பெரும் எண்ணிக்கையான தொற்றாளர்கள் கண்டறியப்படுவதை நாம் பார்க்கிறோம். மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமையினால் தொற்றாளர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாது. இந்த செயற்பாடு வெற்றியளிக்காது. சிலவேளை கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் அவ்வாறு போக்குவரத்து தடை செய்திருந்தால் இச்செயற்பாடு வெற்றியளித்திருக்கும். ஆனால் இப்போது முடியாது. அதேபோல் தற்போது நாடு முழுவதும் முடக்குவது குறித்த கலந்துரையாடல்கள் எழுந்துள்ளன.

முடக்கலினூடாக மக்கள் வீடுகளில் இருந்து வௌியேறாமல் இருப்பதே எதிர்பார்ப்பாகும். இதனூடாக தொற்றுக்குள்ளான நபர் இருக்கும் வீட்டுக்குள்ளே வைரஸ் தடைப்படும். அதற்கு வௌியே வைரஸ் செல்லாது. பரவுவதற்கு ஆட்கள் இல்லாதபோது அந்த வைரஸ் வீரியம் இழந்து இறந்து போகும். ஏனெனில் அதற்கு பல தினங்கள் காற்றில் உயிருடன் இருக்க முடியாது. எத்தனை நாட்களுக்கு முடக்கல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்? அதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு முடக்கல் நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஒருவர் தொற்றுக்குள்ளாகி நோய்க்காவியாக இருப்பார் என்று வைத்துக்கொள்வோம். எங்களுக்குத் தெரியும் தொற்றுக்குள்ளாகும் நபர் இன்னொருக்கு வைரஸை பரப்ப 5- 7 நாட்கள் வரை செல்கிறது. மேற்கூறப்பட்ட தொற்றுக்குள்ளானவர் 3 நாட்கள் முடக்கல் நடவடிக்கை முடிந்து மீண்டும் நாடு வழமைக்கு வரும்போதும் நோய்க்காவியாகவே இருப்பார். நோய் பரவ ஆரம்பிக்கும் நான்காவது, ஐந்தாவது நாட்களில் சமூகத்திற்குள் செல்கிறார்.

அதேபோல் மற்றொரு பிரச்சினையொன்று உள்ளது. அதுதான் தொற்றுக்குள்ளாகி தொற்று அறிகுறிகள் வௌிப்பட்டு பரவலை ஆரம்பிக்கும் காலப்பகுதி. அதற்கு பொதுவாக 5 நாட்கள் எடுக்கும். உதாரணத்திற்கு வீட்டில் ஒருவர் தொற்றுக்குள்ளாகி, நோய்க்காவியாகி வீட்டில் உள்ள அனைவருக்கும் பரப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். குடும்பத்தினர் தொற்றுக்குள்ளாகி அறிகுறிகுறிகளை வௌிப்படுத்த 5 நாட்கள் செல்லும். அப்படியானால் அவர்கள் தற்போது நோய்க்காவிகளாக கருதப்படவேண்டும். அந்த 5 நாட்களுடன் மேலும் 7 நாட்கள் சேர்த்தால் 12,13,14 நாட்கள் வரை இருக்கலாம்.

அதனால்தான் 3 நாட்கள் முடக்கல் நடவடிக்கையினால் மிகக்குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். நான் கேள்விப்படும் ஒவ்வொரு விடயங்களினூடாகவும் சுகாதாரத்துறை வீழ்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் உள்ளதென்றே உணர்கிறேன். சுகாதார ஊழியர்கள், தாதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் மிகவும் களைப்படைந்துள்ளனர். நாம் உள்ளதிலேயே உயர்ந்த செயற்பாட்டுக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதுவும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் கூறுவதென்றால் சுகாதாரத்துறைக்கு ஒரு ஆறுதலை பெற்றுக்கொடுங்கள் என்றே கூறுகிறேன்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image