அரச ஊழியர்களுக்கான நாடாளவிய மூடிய போட்டிப்பரீட்சை தவிர்க்கப்படுகிறதா?

அரச ஊழியர்களுக்கான நாடாளவிய மூடிய போட்டிப்பரீட்சை தவிர்க்கப்படுகிறதா?

அரசாங்கம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் நாடளாவிய ரீதியில் நிரந்தர அரச ஊழியர்களுக்கான இது வரை நடத்தப்பட்டு வந்த (மூடிய) பரீட்சைகள் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (20) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஏப்ரல் மாதம 30ம் திகதி அரசினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் நாடளாவிய ரீதியில் போட்டிப்பரீட்சைகள் எதிர்காலத்தில் எவ்வாறு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரையில் அரசாங்கத்தினால் அரச சேவைக்கான நாடு தழுவிய ரீதியில் திறந்த, மூடிய என இரு வகையில் பரீட்சைகளை நடத்தி வந்தது. இதில் மூடிய போட்டிப்பரீட்சையானது நாடு தழுவிய ரீதியில் சேவையில் இல்லாத நிரந்தர அரச உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. எனினும் 09.11.2020 அன்றைய அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, பொது சேவைகள் ஆணைக்குழு 30.04.2021 அன்று வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இலங்கை கணக்காய்வாளர் சேவைக்கு மட்டுமான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை நிருவாக சேவை உட்பட பல சேவைகளுக்கான திறந்த பரீட்சைக்கான விடயங்களே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனூடாக இதுவரை நிரந்தர அரச சேவை ஊழியர்களுக்கான நாடளாவிய ரீதியில் சேவையில் இணைவதற்கான மூடிய போட்டிப்பரீட்சை வாய்ப்புகள் இல்லாமலாக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் இன்று (21) காலை 10.00 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image