தனியார்துறையிலுள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கு சலுகை கிடைக்குமா?

தனியார்துறையிலுள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கு சலுகை கிடைக்குமா?

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் கர்ப்பிணி ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்து கடமைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பி. கே பிரபாத் சந்திரசிறி இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புசபை தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (19) இக்கடிதம் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரசபைத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய, இல.02/ 2021 11 மற்றும் 2021.05.10 இல. பொது நிருவாக சுற்றுநிரூபத்திற்கமைய அரச சேவையில் உள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு பணியிடங்களுக்கு சமூகமளிக்காமல் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் 19 தொற்றினால் கர்ப்பிணித்தாய்மார் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அரசதுறையில் பணியாற்றும் கர்ப்பிணித்தாய்மாருக்கு வழங்கப்பட்ட சலுகையை முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் தாய்மாருக்கும் வழங்கினால் நன்மைபயக்கும் விடயமாகும் என்பதை தயவுடன் சுட்டிகாட்டுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

்்்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image