கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலுக்கு வரமுடியாமல் வீடுகளில் குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை செலுத்துவதற்கும் தொழில் திணைக்களமும் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல வாரங்கள் மூடப்பட்டாலும் அதன் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 14 ஆயிரத்து 500 ரூபாவை செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால் அது குறித்து தொழில் அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19: அரச - தனியார் துறை கூலிகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
அரசகரும மொழிக் கொள்கை தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சுற்றறிக்கை