கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்
அரச நிறுவனங்களில் கர்ப்பிணிப்பெண்களை பணிக்கு அழைப்பதை தற்காகலிகமாக இடைநிறுத்தற்கான சுற்றுநிரூபம் நாளை (10) வௌியாகவுள்ளது என்று பொது நிருவாக மகாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சின் செயலாளர் ஜே. ஜெ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் அரச நிறுவனங்களில் பணிகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் செயலாளருக்கும் அரச நிறுவன பிரானிகளுக்கும் இடையில் இடம்பெற்றதையடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த ஊழியர்களுடன் அரச நிறுவனங்களில் அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சு, திணைக்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் நாளை (10) வௌியிடப்படும்.
அதற்கமைய கர்ப்பிணித் தாய்மார் சேவைக்கு அழைக்கப்படுவது தொடர்பில் முற்றாக நிறுத்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.