அத்தியாவசிய அரச சேவையினை குறைந்தளவான பணியாளர்களுடன் முன்னெடுத்து செல்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்குவதற்கான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரட்னசிறி இதனை தெரிவித்துள்ளார்.
குறைந்தளவான பணியாளர்களுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசியுங்கள் கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதேநேரம், தனியார்த்துறை நிறுவனங்களும் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை சேவைக்கு அழைத்து பணிகளை முன்னெடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.