ஓய்வூதிய செயலாக்கத்திற்கான நேர்முகத்தேர்வுகள் பிற்போடப்பட்டன

ஓய்வூதிய செயலாக்கத்திற்கான நேர்முகத்தேர்வுகள் பிற்போடப்பட்டன

ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய செயலாக்கத்திற்கான சத்கார பியச நேர்முகத்தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன

ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் எ. ஜகத் டி டயஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் 19 தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு குறித்த நேர்முகத்தேர்வுகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வுக்காக நேரம் ஒதுக்கிக்கொண்ட அனைத்து ஓய்வூதியக்கார்களுக்கு புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts