தொழில்திணைக்களம் செல்லுமுன்னர்...

தொழில்திணைக்களம் செல்லுமுன்னர்...

தொழில் திணைக்களம் செல்லுமுன்னர் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொழில் திணைக்களம், அதன் தலைமைச் செயலகம், மாகாண மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகைத்தரக்கூடிய சேவைபெறுநர்களின் எண்ணிக்கையை வரையறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் தொழில் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதியத்தினைக் கோருவதற்கு, தலைமை செயலகத்திற்கு வருகைத்தர எதிர்பார்க்கும் சேவை பெறுநர்கள், தங்களுக்கான திகதியையும், நேரத்தையும் முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாகாண மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு, ஊழியர் சேமலாப நிதியைக் கோருவதற்காக செல்ல எதிர்பார்க்கும் சேவை பெறுநர்கள், உரிய அலுவலக தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தங்களுக்குரிய திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts