கொவிட் 19- அரச, தனியார் துறை அலுவலக செயற்பாடுகளுக்கான அறிவுறுத்தல்

கொவிட் 19- அரச, தனியார் துறை அலுவலக செயற்பாடுகளுக்கான அறிவுறுத்தல்

கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல், சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச அலுவலகங்கள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்க வேண்டும்.

தனியார் துறையில், குறைந்தப்பட்ச ஊழியர்கள் மாத்திரமே அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் ஏனையவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts