மேபீல்ட் தொழிலாளர்களுக்கு குளவி கொட்டில் இருந்து பாதுகாக்க உடை

மேபீல்ட் தொழிலாளர்களுக்கு குளவி கொட்டில் இருந்து பாதுகாக்க உடை

பெருந்தோட்ட தொழிலாளர்களை குளவி கொட்டில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உடை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கொட்டகலை கொமர்சல் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான வளையமைப்பினால் தயாரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு உடை கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

மேபீல்ட் தோட்ட முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டதுடன் அதனை குளவி தாக்குதலின் போது எவ்வாறு பயள்படுத்த வேண்டும் என செய்முறை விளக்கமும் பெற்றக் கொடுக்கப்பட்டது.

இந்த உடை தயாரிப்புக்கான செலவுகளை நுவரெலியா ரொட்டரி கழகம் தந்து உதவியதாக நிலைபேறான அபிவிருத்திகான வளையமைப்பின் பிரதான இணைப்பாளர் சைமன் கிங்ஸ்லி கோமஸ் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த உடையை பெற்றக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நுவரெலியா ரொட்டரி கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களும் நிலைபேறான அபிவிருத்திகான வளையமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image