ரயில் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
முன்னறிவிப்பின்றி நேற்று (17) முதல் இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத தொழிற்சங்கத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணிப்பகிஷ்கரிப்பானது தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை (18) அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.