பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: நியமனக் கடிதங்கள் தொடர்பான அறிவித்தல்

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: நியமனக் கடிதங்கள் தொடர்பான அறிவித்தல்

ஜனவரி 05 பட்டதாரி பயிலுனர் பயிற்சிக்கான பட்டியலில் இடம்பெறாத பட்டதாரிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் நியமனக் கடிதங்கள் கிடைக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

பட்டதாரி பயிலுனர் வேலை திட்டத்திற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி பயிலுனர் பயிற்சிக்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தப் பெயர் பட்டியலில் பெயர் உள்ளீர்க்கப்படாத தகைமையுடைய தொழிலற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு நியமனம் கிடைக்காமல் போயுள்ளது. அந்தப் பட்டதாரிகள் தொடர்பில் நாங்கள் அமைச்சுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அவர்களுடைய பெயர்களையும் வெளியிட்டு நியமனக் கடிதங்களை வழங்குமாறு நாங்கள் கோரியிருந்தோம்.

இதற்கமைய, குறித்த பெயர்ப்பட்டியலில் உள்ளீர்க்கப்படாத தகைமையுடைய பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் பிரதேச செயலகங்களுக்கு தபாலிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கு அந்த நியமனக் கடிதங்கள் கிடைக்கக்கூடும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் தலையீடு செய்வதற்கு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தயாராக உள்ளது என அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image