ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்து

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்து

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்ரே்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

நேற்று (27) திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகப்பிரிவின் கிவுடேவல கிராமசேவகர் பிரிவில் கிவுடேகல வித்தியாலய வளவில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் ஜனாதிபதி இவ்வறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image