நோர்வூட் தென்மதுரை தோட்டத்தில் முறுகல் நிலை

நோர்வூட் தென்மதுரை தோட்டத்தில் முறுகல் நிலை

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் தென்மதுரை தோட்டத்தில் காணப்படும் பாவனையில் இல்லாத தேயிலை தொழிற்சாலையின் தகரம், இரும்பு மற்றும் ஏனைய பொருட்களை அகற்றவதற்கு முகாமைத்துவம் நேற்று (26) முற்பட்டதால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தினால் நிருவகிக்கப்படும் தென்மதுரை தோட்டத்தில் காணப்படும் தேயிலை தொழிற்சாலை கடந்த பல வருடங்களுக்கு முன்னர் தேயிலை அறைக்கும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டதன் பின்னர் பல்வேறு பொது தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதில் காணப்பட்ட இயந்திரங்கள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டிடம் அழிக்கப்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் அவ்விடத்தில் கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அமைதியின்மை ஏற்பட்டது.

தொழிற்சாலை கட்டிடத்தை அக்கற்ற வேண்டாம் அது தமது பொது பயன்பாட்டுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த நோர்வூட் பிரதேச சபை தலைவர் இந்த கட்டிடம் இளைஞர்கள் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி கூடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே தோட்ட முகாமை இந்த கட்டிடத்தை அக்கற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது அதற்கு நாம் இடம் தர போவதில்லை என தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்த தென்மதுரை தேயிலை தொழிற்சாலை கட்டிடத்தில் வெகு விரைவில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யூவதிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நோர்வூட் பிரதேச சபை தலைவர் வழங்கியதன் பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

d3

d1

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image