1,000 ரூபா சம்பள உயர்வு, காணி உரிமை கோரி போராட்டம்

1,000 ரூபா சம்பள உயர்வு, காணி உரிமை கோரி போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியினர்.

Photo_8_1.jpg

Photo_11.jpg

Photo_7.jpg

Photo_3.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image