கொரோனா காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் குறித்து கவனம்

கொரோனா காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் குறித்து கவனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கல் சமர்ப்பணத்தை தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் சேவையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பான 200க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத தொழில் நிறுவனங்களில் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொடர்பான முறைபாடுகளை தொழில் திணைக்களத்தில் பதிவு செய்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூலம் - தினகரன்

Author’s Posts