குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுமா?

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுமா?

குழந்தைகளுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள கொரோனா தொற்றாளர்களில் 20 வீதமானவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என்று கொழும்பு மாநகரசபை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேற்றும் (06) கொரோனா தொற்று மரணங்கள் 8 நிகழ்ந்துள்ளன. கொச்சிக்கடை, கடவத்த, மொரட்டுவ, களனி, கொழும்பு 13, 14, மஹரகம மற்றும் முந்தள ஆகிய பிரதேசங்களில் இம்மரணங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மட்டும் 726 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்றுடன் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 68,576 ஆகும். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,594 ஆகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image