கொழும்பு சிறுவர் வைத்தியாசாலையில் 150 குழுந்தைகளுக்கு கொவிட் தொற்று
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த 10 மாதங்களில் 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு சிறுவர்களுடன் வருகைத் தந்த 80 பெற்றோர் தொற்றுக்குள்ளாகியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இருவர் இறந்துள்ளனர் என்றும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களை பெற்றோர் செல்லும் வௌியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் வௌி நபர்களுடன் பிள்ளைகள் பழகுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் டொக்டர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகள் சுகயீனமுற்றால் எவ்வித தாமதமுமின்றி அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.