பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் போராட்டம்!

பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் போராட்டம்!

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்படாத மற்றும் கடந்த வருடம் (2019)ம் ஆண்டு பயிற்சியில் இணைக்கப்பட்டு பயிற்சி பூர்த்தியடைந்த நிலையில் இன்னும் நியமனம் பெறாத பட்டதாரிகள் தமக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

 

பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையம், அபிவிருத்திசேவை அதிகாரிகள் சங்கம் ஆகிய இணைந்து அரச நிர்வாக சேவை அமைச்சின் முன்பாக இப்போராட்டத்தை நேற்று (14) முன்னெடுத்தன.

இதன்போது விசேட தேவை, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள், இரு மாவட்டங்களில் பதிவு கொண்டவர்கள் உட்பட பல விடயங்களை காரணம் காட்டி வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகள் வழங்கப்படாத பட்டதாரிகள் பிரச்சினைக்கு உரிய, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு இதுவரை கிடைக்காமை...

01.08.2019 மற்றும் 16.09.2019 ஆகிய தினங்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்படுகின்றமை, உரிய நேர்முகத்தேர்வு இதுவரை நடத்தப்படாமை என்பன இவ்வார்ப்பாட்டத்திற்கான பிரதான காரணங்களாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image