நாட்டின் அந்நிய செலாவணி 3.9 வீதத்தால் வளர்ச்சி!

நாட்டின் அந்நிய செலாவணி 3.9 வீதத்தால் வளர்ச்சி!

இவ்வாண்டு (2020) ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் அந்நிய செலாவணி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் மாதம் நாட்டுக்கு 631 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைக்கப் பெற்றுள்ளது.

2020 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியை கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதனூடாக நாட்டுக்கு கிடைத்துள்ள மொத்த வருமானம் 2.6 வீதமாக அதாவது 6 5,680 அமெரிக்க டொலர்களாக மில்லியனாக அதிகரித்துள்ளது.

2020 ஒக்டோபர் வரையான 7 மாதங்களில் சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை பதிவு செய்யப்படவில்லை. ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் நாட்டுக்கு வருகைத் தந்த மொத்த சுற்றுலாப்பிரயாணிகளின் எண்ணிக்கை 507,311 ஆகும். இதுவே கடந்த வருடம் இக்காலப்பகுதியில் மொத்த சுற்றுலாப்பிரயாணிகளின் எண்ணிக்கை 1,495,055 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பிரயாணிகளின் வருகையினூடாக நாட்டுக்கு ஒக்டோபர் மாதம் வரையில் 956 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இருந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருவாயில் 66.1 வீதம் வீழ்ச்சி காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட சுற்றுலாவின் ஒட்டுமொத்த வருவாய் 2020 அக்டோபர் வரையிலான ஆண்டில் 956 மில்லியன் டாலராக இருந்தது, இதனால் 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 66.1% வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image