தவறான தகவல்களை சமூகத்தில் பரப்ப அனுமதிக்காதிருப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.
இதற்காகஇ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு விஷயங்களை உங்களிற்கு வழங்க பேஸ்புக் நிறுவனமும் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளன.
இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்
தகவற் தொடர்பு தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துடன், தகவல்களைப் பெறுவது எளிதாகிவிட்ட நிலையில், உண்மைத் தகவல்களை விட தவறான தகவல்கள் விரைவாக சமூக மயமாக்கப்படுவதால் பலரும் அசௌகரியத்திற்கும் இடைஞ்சலுக்கும் உள்ளாகின்றனர்.
இந்த நேரத்தில், உண்மையான தகவல்களை சரியாக தேர்ந்தெடுப்பது போலவே தவறான தகவல்களை சமூகத்தில் பரப்ப அனுமதிக்காதிருப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.
இதற்காக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு விஷயங்களை உங்களிற்கு வழங்க பேஸ்புக் நிறுவனமும் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளன. மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆறு முக்கிய காரணிகள் கீழே தரப்படுகின்றன.
இக்காரணிகளை நன்கு தெளிவாக வாசித்து புரிந்துகொண்டு அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்களும் தவறான தகவல் பரவலுக்கு எதிரான போரில் இணைந்து கொள்ளலாம்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள தொடர்புகளில் பெற முடியும் .