தரம் ஒன்று முதல் ஆங்கிலம் - அடுத்த ஆண்டு 13,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்தே செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதனால், கல்வியில் மாற்றம் ஏற்படும் சகாப்தம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் என்றும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பிரித்தானிய கவுன்சிலும் ஏனைய நிறுவனங்களும் இதற்கு உதவி வருவதாகவும், இதற்கு தேவையான பணிப்புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
புதிய பாடசாலை பருவம் வரும் மார்ச் மாதம் துவங்கிய, முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயன்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும்.
முன்பருவத்திற்கான வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திரு.சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.