ஆடை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆடை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்கள் நிறுவன கொள்கைகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

கொவிட் தொற்று பரவுவதற்கு முன்னர் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை போன்று இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள் ஆடை வி்வகாரத்தில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்தாக்க நடவடிக்கை - பிரதமர்

கொவிட் பெருந்தொற்று பரவிய காலப்பகுதியில் இலகுவான உடை அணிந்து பணிக்கு செல்ல முடியும் என அரச உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும், பாடசாலை ஆசிரியர்களுக்கு அந்த சுற்றுநிருபம் பொருந்தாது என  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கமைய, திருத்தங்களுடன் புதிய சுற்றுநிரூபமொன்று வௌியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர குறிப்பிட்டார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image