உக்ரேனில் இருந்து 98% பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர்: தூதரகம்
ரஷ்ய படையெடுப்பால் உக்ரேனில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை பாகிஸ்தான் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக பாகிஸ்தான் தூதுரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'பாகிஸ்தான் தூதரகம் உக்ரைனில் இருந்து 98வீதமான பாகிஸ்தானியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. இப்போது உக்ரேனில் சில (சுமார் 30) பாகிஸ்தானியர்கள் மட்டுமே உள்ளனர், அவர்கள் கடுமையான சண்டை பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர், 'என்று தூதரக பணி ட்விட்டரில்; தெரிவித்துள்ளது.
உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் பாகிஸ்தான் தூதரகம் அணுகி மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்கவும் மீதமுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரேன் அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல்- உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்
உக்ரைனை வௌியேறுமாறு தமது பிரஜைகளை எச்சரித்துள்ள நாடுகள்
உக்ரேன் தலைநகர் கடும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை கியேவில் இருந்து மாற்றி, டெர்னோபிலில் இருந்து அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.
உக்ரேனில் கடந்த மாதம் போர் வெடித்தபோது அங்கு சுமார் 3,000 பாகிஸ்தானியர்கள் இருந்தனர் என்றும் அந்த டிவிட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.