சர்வதேச சந்தையில் 14 ஆண்டுகளின் பின்னர் உயர்வடைந்த மசகு எண்ணெய் விலை
14 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டின் பின்னர் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.