உக்ரைனை வௌியேறுமாறு தமது பிரஜைகளை எச்சரித்துள்ள நாடுகள்

உக்ரைனை வௌியேறுமாறு தமது பிரஜைகளை எச்சரித்துள்ள நாடுகள்

 ரஷ்யாவின் படையெடுப்பு உடனடியானதாக இருக்கும் என்று மேற்கத்திய சக்திகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை தங்கள் நாட்டு மக்களை வெளியேறச் சொன்னவர்களில் அடங்கும்.

மொஸ்கோ உக்ரைனின் எல்லையில் 100,000 துருப்புகளைக் குவித்துள்ளது, ஆனால் படையெடுப்பதற்கான எந்த நோக்கத்தையும் மறுக்கிறது.

ஒரு சில நாட்களில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நிலையில் ரஷ்ய இராணுவம் இருப்பதாக அமெரிக்க உயர் அதிகாரி எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image