நைஜீரிய தேவாலயம் மீதான தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

நைஜீரிய தேவாலயம் மீதான தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

தென் மேற்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று வைத்திசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நேற்று (05) இச்சம்பவம் இடம்பெற்றது என்றும் தேவாலயத்துக்கு உள்ளேயும் வௌியேயும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிதாரிகள் சுட்டுள்ளனர். இதனால் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஒண்டோ மாகாண பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image