ஆப்பிரிக்காவும் அப்பால் மேலும் 30 நாடுகளுக்கு குரங்கு அம்மை நோய் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி வழங்கும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று தாம் நம்புவதாக உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளில் அண்மைக்காலமாக நூற்றுக்கணக்கான குரங்கு அம்மைத் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பபட்டு சில காலத்தின்பின்னர் இப்பொறிமுறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பரவல் தொடர்பில் சுகாதார அவசரகால நிலைமை பிரகடனப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க உலக சுகாதார தாபனம் அடுத்தவாரம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.