தமிழ்நாட்டில் இன்று (06) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளாந்தம் 2500 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். அத்துடன் 121 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகின்றமையினால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.