பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிக்க தொழிற்சங்க யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிக்க தொழிற்சங்க யாப்பில்  உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்!

வேலை உலகில் இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல தொழிற்சங்கங்களின் யாப்பில் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்குவது மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) கொழும்பு ஜானகி ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே, பாலின அடிப்படையான துன்புறுத்தல்கள், வேலையுலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள குறித்த வழங்கப்பட்ட விளக்கங்கள் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன என்பன தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலில் NUSS, Protect, JSS, CESU,FTZ மற்றும் GNOA ஆகிய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் மகளிர் மத்திய நிலையம், மற்றும் ரெட் அமைப்பு ஆகியவற்றின் தலைவிமாரும் கலந்துகொண்டிருந்தனர்.

பங்கேற்பு தொழிற்சங்கங்கள் பாலினத்திற்கு எதிரான வன்முறை மற்றும் வன்முறை ஒழிப்பு தொடர்பான C190 சமவாயத்தில் தெரிவு செய்யப்பட்ட விதிகள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை அரசியலமைப்பில் இணைப்பதில் உள்ள தடைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது ஆழமாகாக விவாதிக்கப்பட்டன. சட்ட அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டன.

பணியிடத்தில் வன்முறை மற்றும் வன்முறையை ஒழிக்க தொழில் ரீதியான நோக்குகள், எதிர்கால செயற்றிட்டங்கள் என்பன இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் தொழில்ரீதியாக இடம்பெறும் வன்முறைகளை முறையிடுவதற்கான பொறிமுறையின் அவசியம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது..

GBV 2

GBV3

GBV4

GBV6

GBV7

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image