கொவிட் சிகிச்சை கடமைகளில் இருந்து விலகவுள்ள ஆயர்வேத வைத்திய அதிகாரிகள்

கொவிட் சிகிச்சை கடமைகளில் இருந்து விலகவுள்ள ஆயர்வேத வைத்திய அதிகாரிகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க ஒன்றிணைந்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொவிட் நோயாளர்களுக்கு பராமரிப்பு கடமையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படாமை, அகில இலங்கைரீதியான சேவையான இலங்கை ஆயுர்வேத வைத்திய சேவையில் பதவி நியமித்தல், மாகாணசபைக்கு பொறுப்பு வழங்கல் திட்டத்தை உடனடியாக நிறுத்தல் ஆகியன உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து அடுத்த வாரம் அனைத்து கொவிட் சிகிச்சை பொறுப்புகளில் இருந்து விலகி போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்ந்தும் தௌிவுபடுத்தியபோதிலும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால் கொவிட் கடமைகளில் இருந்து நீங்க தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் சமல் ஆர் குலதிலக்க தெரிவித்தார்..

அதற்கமைய, ஆயுர்வேத பொது சுகாதார அதிகாரிகளினூடாக முன்னெடுக்கப்பட்ட நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்து வேலைத்திட்டம், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சை வழங்கல் ஆகிய செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக்கொள்ளவுள்ளதாக இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image