வௌிவிகார அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

வௌிவிகார அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

வௌிவிவகார அமைச்சின் கொன்சியுலர் அலுவர்கள் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பிரிவில் மின்னணு ஆவண சான்றளிப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் ஆவணங்களை பயனாளர்களுக்கு வழங்குவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு, இதனால் பிராந்திய கொன்சியுலர் சேவைகள் அலுவலகங்கள் மற்றும் வௌிநாட்டு தூதரகங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில்நுட்பக் குழு பழுது பார்க்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அது வரை இன்று முதல் (22) நாளொன்று 150 பேருக்கான சேவைகள் மாத்திரமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள், ஆவணங்களை உறுதிப்படுத்தும் சேவைகள் குறித்த கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும் என்றும் திருத்தப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

011- 2338812 தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சலூடாக மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image