தொழிலாளர் பிரச்சினை தீர்க்க பாராளுமன்ற சட்டம் - தொழில் அமைச்சர்!

தொழிலாளர் பிரச்சினை தீர்க்க பாராளுமன்ற சட்டம் - தொழில் அமைச்சர்!

ஒரு மாதத்துக்குள் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக புரிந்துணர்வுக்கு வரவில்லையெனில், பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் எனத் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ,உறுதியளித்ததார் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் ஆலோசனைக் கூட்டம் ஒன்று தொழில் அமைச்சில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டபோதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பள நிர்ணய சபையின் ரூபா 1000 அடிப்படை சம்பள தீர்மானத்துக்குப் பின்னர், மலையக தொழிலாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என, சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில் பெருந்தோட்ட நிர்வாக அதிகாரிகளின் அடாவடி செயற்பாட்டின் விளைவாக பெருந்தோட்ட மலையக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனை தொடர்பாக தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது அமைச்சர் இவ்வுறுதியை வழங்கினார் என்றும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image