அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள  தோட்ட தொழிலாளர்கள்!

அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள  தோட்ட தொழிலாளர்கள்!

பொகவந்தலாவை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தின் ஐந்து நேற்று (30) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கமூன்று மாதங்களாக தாங்கள் நிம்மதியாக தொழில் செய்யவும் இல்லை சந்தோஷமாக சம்பளம் பெற்றுக் கொண்டதும் இல்லை என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு தொழிற்துறையிலும் தொழிலாளியின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் அவர்களுக்கான பணி சுமை அதிகரிப்பதில்லை ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்புடன் பணி சுமையும் அதிகரிக்கப்படுவதால் சம்பள உயர்வு பெற்றாலும் எமது நிம்மதி இலக்கப்பட்டு விடுகின்றது என உண்ணாவிரத போராளி ஒருவர் தெரிவித்தார்.

எங்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது நாம் பலரையும் நம்பி பிரயோசனம் அற்று போயுள்ளோம் எமக்காக பேச வேண்டிய தொழிற்சங்கங்கள் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்னவென்று எமக்க புரியவும் இல்லை. அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று எமக்கு தெரியவும் இல்லை என்று இவர்கள் தெரிவித்தனர்.
தோட்ட முகாமை எங்களுக்கு மிக நெருக்கடி கொடுக்கின்றது தினமும் அதிகப்படியான தேயிலை கொழுந்து பறிக்கும் படி எம்மை நிர்ப்பந்திக்கின்றது. சில தொழிலாளர்கள் இந்த நெருக்கடியை தாங்கி கொள்ள முடியாது வாழ்க்கையை முடித்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு;ள்ளனர். அந்த முடிவில் இருந்து தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காகவே நாம் இந்த அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எமது பெருந்தொட்ட முகாமையுடன் பல சுற்று பேச்சவார்த்தைகள் நடாத்தியும் எமக்கு எந்த சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை கம்பனி நட்டத்தில் இயங்குகின்றது என்று தெரிவித்து அந்த நட்டத்தை ஈடு செய்ய எம்மை அதிக கொழுந்து பறிக்க சொல்லுகின்றனர். ஆனால் கம்பனி பணிப்பாளர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் பயணிக்கின்றார் இது எப்படி என்று கேளவி எழுப்புகின்றனர்.

நாங்கள் எமது கோரிக்கைகளை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், தொழில் அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்த பதிலும் இதுவரை இல்லை அப்படியே சிலர் பேசினாலும் பத்தோடு பதின்னொன்றாக பயணிக்க வேண்டும் என எங்களுக்கு அறிவுரைக் கூறுகினறனர். இதில் அரசியல் நடாத்த வேண்டாம் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எமது தோட்டம் பெரும் பகுதி காடாக்கப்பட்டு அதில் 18 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டும் என்று முகாமை; நிர்பந்திப்பதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ள பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத் தொழிலாளர்கள், வேறுவழியின்றியே நாம் அடையாள உண்ணா விரத போராட்த்தை ஆரம்பித்துள்ளோம். மேலும் தொழிற்சங்கங்களால் ஏமாற்றப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் சார்பாகவும் நாம் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image