கைத்தொழில்களை ஊக்குவிக்க ஆலோசனைக் குழு - அமைச்சரவை அனுமதி

கைத்தொழில்களை ஊக்குவிக்க ஆலோசனைக் குழு - அமைச்சரவை அனுமதி

உள்ளூர் கைத்தொழில்களை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்குமான ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற அமைச்சரைவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,

நிரல் அமைச்சுக்கள் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறையின் பிரதிநிதிகளுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மை, கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் செயன்முறையில் பிரச்சினைகளும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

குறித்த தரப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கைத்தொழில்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பதற்கான இயலுமை இருப்பினும், இதுவரை அதுதொடர்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கைத்தொழில் துறையில் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி, 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த திருத்தங்கள் உள்வாங்கப்படும் வரை, 20 பிரதான கைத்தொழில் துறைகளின் வர்த்தக சபை சம்மேளனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் குறித்த கைத்தொழில் துறையின் நிபுணத்துவர்கள் அடங்கலாக ஆலோசனைச் சபையொன்றை நியமிப்பதற்கு கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image