பிசிஆர் கட்டணங்களில் மாற்றம் - UAE

பிசிஆர் கட்டணங்களில் மாற்றம் - UAE

ஐக்கிய அரபு இராச்சிய தலைநகரில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்கான கட்டணத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (01) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் பிசிஆர் பரிசோதனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மருத்துவ வசதிகளுக்கான கட்டணம் 40 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை உட்பட மருத்துவ வசதிக்கான கட்டணம் 50 திர்ஹமாகும். சில குடியிருப்பாளர்களுக்கான மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அந்நாட்டு தேசிய அவசரநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை வௌியிடப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கான புதிய கொவிட் சுகாதார நடைமுறைகளுக்கமைய இப்புதிய கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அத்துடன் நேற்று தொடக்கம் அபுதாபிக்குள் நுழைவதற்கு அல் ஹொஸ்ன் அனுமதி அட்டை அவசியம் என்றும் அந்நகர அவசநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 அறிகுறிகள் கவனத்திற்கொள்வதில்லையென அபுதாபி ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் பொதுவிடங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி அட்டை அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வௌியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையெனினும் உள்ளக இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவௌி கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image