வீட்டுப் பணியாளர்களின் சம்பளத்தை வைப்பிலிடலாம் - UAE

வீட்டுப் பணியாளர்களின் சம்பளத்தை வைப்பிலிடலாம் - UAE

இன்று (27) தொடக்கம் வீட்டு உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க ஊதியபாதுகாப்பு அமைப்பை (Wage Protection System -WPS) குடும்பங்கள் பயன்படுத்த முடியும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

WPS ஆனது, அமீரக மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிப் பரிமாற்றங்கள், பரிமாற்ற அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ஒன்லைனில் சம்பளத்தைச் செலுத்த முதலாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுகிறது.

 

மனித வளங்கள் மற்றும் எமிரேட்டசேஷன் அமைச்சகத்தின் வீட்டுப் பணியாளர் விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் கலீல் கோவ்ரி, வீட்டுப் பணியாளர்களுக்கான WPS ஐ விருப்பப்படி செயல்படுத்துவது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

 

“தொழில் வழங்குநர்கள் தமது பணியாளர்களின் சம்பளத்தை சரியான நேரத்தில் செலுத்தியிருப்பதை நிரூபிக்க இம்முறை உதவுகிறது, அத்துடன் வீட்டு உதவியாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வகையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே நிலையான மற்றும் ஆரோக்கியமான பணி உறவை உருவாக்க இந்த அமைப்பு உதவுகிறது,” என்று கௌரி கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image