கூரிய ஆயுதங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்!

கூரிய ஆயுதங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய தண்டனைச் சட்டத்தின் கீழ், சில அவசியமான தொழில்களில்களுக்கு தவிர கத்திகள், சுத்தியல்கள் அல்லது கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்வது குற்றமாகும்.

 தண்டனைச் சட்டம் 2021, 31ம் இலக்க சட்டத்திற்கமைய ஜனவரி மாதம் 2ம் திகதி தொடக்கம் புதிய தண்டனைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

 இதற்கு முதல் கூரிய ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் அன்றி உடன் வைத்திருப்பது தண்டனைக்குரிய விடயமாக பார்க்கப்படவில்லை என்கிறார் அல் ரொவாட் சட்டத்தரணிகளுக்கான ஆலோசகர் டொக்டர் ஹசன் எல்ஹய்ஸ்.

பொது மக்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் குறிப்பாக மாமிச விற்பனை நிலையங்கள், குழாய் செப்பனிடுபவர்கள் போன்ற தொழிற்சார்ந்தோர் இதற்கு விதிவிலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image