ஐக்கிய அமீரகத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளருக்கு மிகவும் நன்மைப்பயக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.
கேள்வி -
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய தொழிலாளர் சட்டத்திற்கமைவாக வாரத்திற்கு ஆகக்கூடிய 48 மணி நேர வேலை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தெரிந்துகொண்டேன். நான் டுபாயை தளமாக கொண்ட நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். எனது மாதாந்த அடைவினை அடைவதற்கு பொதுவாகவே எனக்கான வேலை நேரத்தை விடவும் அதிகமான மணித்தியாலங்களில் அங்கு நான் பணியாற்றுகிறேன். இந்நிலையில் எனது ஆகக்கூடிய எல்லை என்பதன் பொருள் என்ன? ஏற்கவே திட்டமிட்ட மாதாந்த அடைவை அடைவதற்கு எனது வேலை நேரத்தை விடவும் அதிக மணி நேரங்கள் தினமும் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக வேலை நேர கொடுப்பனவை கோர முடியுமா? நட்டஈடு எதுவாக இருக்கும்? அதனை எவ்வாறு கோருவது?
பதில் -
உண்மைதான். தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கமைய, ("புதிய வேலைவாய்ப்புச் சட்டம்") 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண் (33) சரத்து 17 (1) ; மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிக்கான நிலையான பொது விதிகள் குறித்த 2021 இன் பெடரல் ஆணை-சட்ட எண் (47) இன் பிரிவு 7 பிரிவு 1 இன் கீழ் வாராந்தம் 48 மணித்தியாலயங்களும் வாராந்தம் 8 மணித்தியாலங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சட்டங்களும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2022 பெப்ரவரி மாதம் 2ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. இது பெடரல் சட்டம் 1980ம் ஆண்டு 8ம் இலக்க தொழில் உறவு சட்டத்திற்கு மாற்றீடாக அமையும்.
எவ்வாறாயினும், புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ்: “அமைச்சரவை, அமைச்சரின் முன்மொழிவிற்கமைய, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன், குறிப்பிட்ட பொருளாதாரத் துறைகள் அல்லது குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது தொழிலாளர்களுக்கு தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கலாம், குறைக்கலாம் அல்லது இடைவேளை வழங்க முடியும்.
எனவே, மனித வளங்கள் மற்றும் அமீரக அமைச்சகத்தால் (MoHRE) நிர்ணயிக்கப்பட்ட விலக்கு அளிக்கப்பட்ட துறைகளுக்குள் நீங்கள் பணியாற்றும் துறை உள்ளடக்கப்படாவிடின் வாரத்திற்கு 48 மணிநேரம் என்ற அதிகபட்ச வரம்பு உங்களுக்குப் பொருந்தும். மேலும் விளக்கங்களுக்கு நீங்கள் MoHRE ஐ தொடர்பு கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் மனித வளங்கள் மற்றும் அமீரக அமைச்சகத்தை (MoHRE) தொடர்புகொண்டு அறிந்துகொள்ளும்.
இரண்டாவது கேள்விக்கு பதிலளிப்பதாயின், உங்கள் துறை விலக்களிக்கப்பட்ட துறைகளின் கீழ் உள்வாங்கப்படாவிடின் மேலதிக பணியாற்றும் ஒவ்வொரு மேலதிக மணித்தியாலங்களுக்கும் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.
மூன்றாவது கேள்வி- புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் நேர இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சூத்திரங்கள் உள்ளன. புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தில் இருந்து தொடர்புடைய விதிகள் (மொழிபெயர்க்கப்பட்டவை) இனி வழங்கப்படும்.