உத்தியோகப்பூர்வமற்ற இணையதளங்களில் குறைந்த விலைக்கு விமான டிக்கட்டுக்களை பதிவு செய்வதை தவிர்க்குமாறு டுபாய் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்த்துகொள்ளும் வகையில் இவ்வறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பருவகால கேள்வியானது விமான டிககட்டுக்களின் விலை அதிகமாகின்றது. இந்நிலையில் நன்கு தெரிந்த பதிவு செய்யப்பட்ட இணையதளங்களில் மாத்திரமே டிக்கட்டுக்களுக்கு முன்பதிவு செய்தவதனூடாக ஏமாற்றக்காரர்களிடமிருந்து தப்ப முடியும் என்று டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றுக்காரர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விடயத்தில் டுபாய் பொலிஸார் அதிக கவனம் செலுத்துகின்றனர். கோடைக்காலத்தில் மக்கள் பல இடங்களுககு செல்வதற்கு ஆர்வம் காட்டும் நிலையில், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான விமான டிக்கட் அல்லது பொதிகளுக்கான விலையை குறைப்பது ஏமாற்றுக்காரர்கள் கையாளும் உத்தியாகும். இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று குற்றவியல் விசாரணை திணைக்களப்பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜமால் சலீம் அல் ஜலாப் தெரிவித்தார்