அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்ற மற்றொரு இலங்கையர்

அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்ற மற்றொரு இலங்கையர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர் பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 15,000 மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார்.

இலக்கம் 213288 பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டில் இலங்கையை சேர்ந்த ரசிக்க என்ற நபர் இத்தொகையை வென்றுள்ளார்.

கடந்த மே மாதம் 29ம் திகதி 8 பேருடன் இணைந்து இந்த பிக் டிக்கட்டை கொள்வனவு செய்துள்ளார்.

பொறியியலாளராக டுபாயில் பணியாற்றும் ரசிக்க அல் கைமா பிரதேசத்தில் வசிக்கிறார். கடந்த மாதம் இலங்கையை சேர்ந்த மொஹமட் மிஷ்பாக் என்பவர் 12 மில்லிய்ன திர்ஹம்களை பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts