கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நோன்பு நோற்பதற்கு முன்னர் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம் என்று புனித றமழான் மாதத்தை முன்னிட்டு அபுதாபி வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குழு ரீதியாக நோற்கப்படும் நோன்பு நோற்றல் மற்றும் விடல் என்பவற்றில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இப்தார் அனுசரணைகள் ஒன்லைன் ஊடாக மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி ஆண்களுக்கான மசூதிகளில் சபைத் தொழுகையை அனுமதிப்பதும், இஷா மற்றும் தாராவிஹ் தொழுகையின் காலம் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருப்பதும் நடவடிக்கைகளில் அடங்கும்.
அபுதாபி அவசர நிலைமை மற்றும் அனர்த்த குழுவானது அந்நாட்டு சுகாதார திணைக்களத்துடன் இணைந்து புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.