ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டை பெறல் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்கு பதிலளிக்கையில் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் போதே அனைத்து கட்டணங்களும் அறவிடப்படுவதாகவும் எனவே மேலதிக பணக்கொடுப்பனவுகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் அந்நாட்டு அடையாள அட்டை மற்றும் குடியுரிமை அதிகாரசபை தனது உத்தியோகப்பூர்வ டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல்களை அறிய 6005 22222 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.