யாரெல்லாம் இரு வாரங்களுக்கொரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டும்?

யாரெல்லாம் இரு வாரங்களுக்கொரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டும்?

கொவிட் 19 தொற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பணியாளர்கள் 14 நாட்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சிய மனித வள மற்றும் அமீரக அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் உள்ள பணியாளர்கள் இப்பரிசோதனை செய்யவேண்டும் என்றும் குறிப்பாக சில துறைகளை சேர்ந்தவர்கள் கட்டாயமாக இப்பரிசோதனையை செய்துகொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல், உணவகங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக, தனி மனித சேவைகள் ஆடை சுத்திகரிப்பு, அழகுநிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் உட்பட) பணியாற்றும் ஊழியர்கள் 14 நாட்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாகும்.


அபுதாபி தனியார்துறை

அபுதாபியியில் முக்கிய துறைகள் மற்றும் சேவைத் தொழில்களில் பணிபுரியும் அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாய இலவச பி.சி.ஆர் சோதனை செய்வதற்கான அனுமதியை கொவிட் 19 தொற்றுநோய்க்கான அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மார்ச் 22 அன்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இரண்டாவது தடவை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்வது கட்டாமாகும். வாராந்திர பி.சி.ஆர் சோதனைகளைச் செய்வதன் மூலம் பெறக்கூடிய அல் ஹோஸ்ன் பயன்பாட்டில் மின் எழுத்து காட்டப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அரச ஊழியர்கள் வாராந்த பிசிஆர் செய்தவற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்ட அனைத்து அரசதுறை ஊழியர்களும் மாதாந்தம் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அபுதாபி மனிதவள அதிகாரசபை அறிவித்துள்ளது.

சார்ஜா தனியார்துறை

சார்ஜா உணவகங்களில் பணியாற்றுபவர்கள் 14 நாட்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சார்ஜா நகரசபை அறிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி ஏற்றல் திட்டத்தினூடாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள், பரிசோதனைக்காக தடுப்பூசி ஏற்ற தானாக முன்வந்தவர்கள் மற்றும் அல் ஹோன்ஸ் செயலியில் நட்சத்திர குறி அல்லது H குறியுள்ளவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

அஜ்மான்
உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், அங்காடிகள், உடற்பயிற்சிக்கூடங்கள், ஆண், பெண் சிகையலங்கார நிலையங்கள், ஆட்சேர்ப்பு அலுவலகங்கள், உணவு விநியோக கம்பனிகள், வாகனம் கழுவும் இடங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் வாராந்தம் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இம்மாதம் 22ம் திகதி சார்ஜா அவசர நெருக்கடி முகாமைத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. தடுப்பு மருந்து இரு தடவைகள் ஏற்றிக்கொண்டவர்களுக்கு அல் ஹோன்ஸ் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image